அஸ்ட்ராசெனகா தடுப்பூசி- 2ஆவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை 19ஆம் திகதி ஆரம்பம்!!

அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். இதன்படி, இரண்டாவது டோஸின் தடுப்பூசித் திட்டம் ஏப்ரல் 19ஆம் திகதி முதல் தொடங்கும் எனவும் மூன்று இலட்சம் டோஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசி இரண்டாவது டோஸுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இன்று...

புத்தூர் கொலை சம்பவத்தில் தேடப்பட்டவரே தமிழகத்திற்கு தப்பிச் சென்றார்!

தமிழகத்தில் நேற்றையதினம் கைதான இரண்டு இளைஞர்களும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு கண்ணாடிஇழை படகுமூலம் சென்ற இரண்டு இளைஞர்கள், சுங்கத்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பிரதாப், நாகேஸ் என தம்மை கூறியதுடன், மன்னார், அடம்பன் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். மன்னாரிலிருந்து அவர்கள் சட்டவிரோதமாக தப்பி சென்றிருந்தனர். அவர்களின்...
Ad Widget

இராமநாதன் கல்லூரி கல்வி செயற்பாடுகள் நிறுத்தம்!

மருதனார் மடம் இராமநாதன் கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். கல்லூரியின் அதிபர் , ஆசிரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டமையை அடுத்தே பாடசாலையின் கல்வி செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் கல்வி செயற்பாடுகள் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும் எதிர்வரும் 19ஆம் திகதியே...

இன்று முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ள சூரியன்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி...

யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நீடிப்பு!

இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதன்படி, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 29ஆம்...

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொற்றிலிருந்து மீண்டுள்ள அவர், சிகிச்சை மையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.