. March 23, 2021 – Jaffna Journal

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் அனைத்து பேக்கரி பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள், வரி மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவையை அடிப்படையாக கொண்டே குறித்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர்... Read more »

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

புத்தாண்டு காலங்களில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இயல்பாக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மேலும் இறுக்கமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.... Read more »

பிரதமர் பங்களாதேஸ் சென்றமைக்காக காரணத்தை கூறும் சுமந்திரன்

ஜெனீவா பிரேரணை தொடர்பில் மற்றைய இஸ்லாமிய நாடுகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காகவே பிரதம மந்திரி பங்களாதேஸ் சென்றுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள வவுனியா குளம் மற்றும் சுற்றுலா மையம் என்பவற்றை பார்வையிட்ட பின்... Read more »

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு சிறப்பு வசதி அறிமுகம்!!

தேசிய அடையாள அட்டைகளை விரைவாகப் பெற சிறப்பு முன்பதிவு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தொடர்புடைய திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யலாம். மேலும், ஏற்கனவே... Read more »

யாழ்ப்பாணத்தில் மூவரும் மன்னாரில் ஒருவரும் கோவிட்-19 நோய்த்தொற்றுடன் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 3 பேரும் மன்னாரில் ஒருவரும் கோவிட் -19 நோய்த்தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,... Read more »

குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் 400 ஏக்கர் நிலங்களை கோரும் தொல்லியல் திணைக்களம்

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையை சுற்றியிலுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக சுவீகரிக்கும் நடவடிக்கையைதொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. குருந்தூர்மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக... Read more »

இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் – அங்கஜன்

இந்த அரசாங்கத்தை திட்டமிட்டு குறை கூற வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறான அரசாங்கமாக காண்பிக்க முயல்கின்றனர் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், நாடாளுமன்ற பிரதி குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஆறுகளை பாதுகாப்புாம்... Read more »

பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் முயற்சி – சுமந்திரன்

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் கைக்கூலிகள் செயற்பட்டு வருவதாக நாடளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டினார். வவுனியாவிற்கு நேற்று (திங்கட்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.... Read more »