Ad Widget

தொடருந்துடன் பாடசாலை பஸ் மோதி விபத்து; மாணவர்கள் பலர் படுகாயம்!!!!

தலைமன்னாரில் தொடருந்துடன் பாடசாலை சேவை பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் பியரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மன்னார் பொது வைத்தியசாலை அம்புலன்ஸ் வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. அவசர சிகிச்சை வழங்கப்படவேண்டிய 10 மாணவர்கள் அம்புலன்ஸ் வண்டியில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்று...

நாளைய பேரணியில் மக்களை உணர்வுபூர்வமாக கலந்து கொள்ள முதல்வர் மணிவண்ணன் அழைப்பு!

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வு பூர்மாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் சுழற்சி...
Ad Widget

கடத்தல்கள்- படுகொலைகள் குறித்து ஆதாரம் உண்டு: பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் யாழில் போராட்டம்!

கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக போராட்டடொன்றினை முன்னெடுத்துள்ள கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளார். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...

வங்கிக் கடனை செலுத்தாவிட்டால் சொத்துக்களை கையகப்படுத்துவதா? பிரதமரின் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக வங்கிக் கடன்களை செலுத்தாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு பதிலாக சலுகை காலம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வங்கி பிரதானிகளுக்கு தெரிவித்தார். வங்கி கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத தொழில்முனைவோரின் சொத்துக்களை கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக...

சர்வதேச நீதிகேட்டு நல்லூரில் நாளை பேரணி; அனைவரையும் அணிதிரள பல்கலை. மாணவர் ஒன்றியம் அழைப்பு!!

சர்வதேச நீதி கோரி நல்லூரில் நாளை புதன்கிழமை இடம்பெறும் பேரணிக்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்நாட்டின் பூர்வீக குடிகள் ஆகிய நாம் எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புக்கு நீதி வேண்டியும் எமது உரிமைகளை பெற்றிடவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து...

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று!!

வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 6 பேர் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மீன்சந்தை தொற்றாளர்களுடன் தொடர்புடையா ஒரு பகுதியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட...

தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார் – சுமந்திரன்

இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் . கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்....

இலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை!

கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொவிஷீல்ட் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் பாவனையை சில உலக நாடுகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்த நிலையில், இலங்கையில் தடுப்பூசி பாவனையை நிறுத்துவது தொடர்பாக...