Ad Widget

யாழில் கொள்ளை, திருட்டுகளில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்!

யாழ்.நகரில் மூன்று இடங்களில் கொள்ளை மற்றும் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 8 தங்கப் பவுண் நகைகள் மற்றும் இலத்திரனியல் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். கொழும்புத் துறையில் உள்ள வீடொன்றுக்குள் அண்மையில் புகுந்த மூவரடங்கிய கும்பல் அங்கு வசித்த வயோதிபர்களை மிரட்டி 8 தங்கப் பவுண்...

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விஷேட அறிவிப்பு!!

இந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமக்கான தேசிய அடையாள அட்டைகளை இன்னும் பெறவில்லையென்றால், பாடசாலை அமைந்துள்ள பிரதேச செயலகத்தில் அது குறித்து விசாரிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த காலங்களில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த போது மாணவர்களின் தேசிய அடையாள அட்டைகளை, சம்பந்தப்பட்ட ஆவணங்களை பிரதேச...
Ad Widget

யாழ்.மாநகர முதல்வர் சுவிஸ் தூதுவர் சந்திப்பு!

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள தூதுவர், பல தரப்பினரையும் தொடர்ச்சியாக சந்தித்துவரும் நிலையில் நேற்று, நூலகத்திற்கு சென்று பார்வையிட்டதோடு மாநகர முதல்வரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில்...

இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற முடியாவிடின் பட்டமளிப்பு விழாவைப் பிற்போடுங்கள்: மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் ஏதாவது இருப்பின் நிகழ்வைப் பிற்போட்டு, கோவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் ஆலோசனை வழங்கியுள்ளார். யாழ். பல்கலைக் கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24,...

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வார இறுதியில் தடுப்பூசி வழங்கப்படும்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அஸ்ட்ரா செனகா கொவிஷீல்ட் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பதில் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச்...

பளையில் பல ஏக்கர் காணிகளை சீனாவுக்கு வழங்க நடவடிக்கை – சுரேஷ் குற்றச்சாட்டு

கிளிநொச்சி, பளை பகுதியில் பல ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது...

பேரணியில் கலந்து கொண்ட இளைஞன் 6 மணிநேரத்தில் பின்னர் விடுதலை

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டத்தில் பங்கேற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் 6 மணிநேர விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 26 வயதுடைய இளைஞன் நேற்றையதினம் நண்பகல் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் போராட்டத்தின் போது அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த இளைஞனை...