Ad Widget

திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தடை!!

மன்னார் திருக்கேதீஸ்வர மஹா சிவராத்திரி விழாவின் போது கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தருகின்றவர்களை தவிர்த்து மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களின் பங்களிப்புடன் மஹா சிவராத்திரி விழாவை கொண்டாட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (15) திங்கட்கிழமை மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி...

மாநகர சபை உறுப்பினர் தர்சானந் மது அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு!!

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் மது அருந்திவிட்டு சபை அமர்பில் கலந்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளாத உறுப்பினர் ப.தர்சானந் சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்பு இன்றையதினம் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போதே இவ்வாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது....
Ad Widget

வெள்ளை கொடியை காண்பித்த போதிலும் இலங்கை இராணுவம் அவர்களை சுட்டுக்கொன்றது- நவநீதம் பிள்ளை

இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியை காண்பித்தவர்களையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம் என முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது நவநீதம் பிள்ளை மேலும் கூறியுள்ளதாவது,...

புதிய வகை கொரோனா தொற்றினால் நாட்டிற்கு ஆபத்து இல்லை!!

பிரித்தானியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் நாட்டில் இனங்காணப்பட்டுள்ள போதிலும் அது நாட்டிற்கு ஆபத்தில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும், நாட்டை முடக்கும் தேவை இல்லை என்றும் அவர் கூறினார். இதேவேளை, கொரோனா நோயாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களில் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக அரச...

வடக்கு மாகாணத்தில் 50 மருத்துவர்கள் புதிதாக நியமனம்!!

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு 50 மருத்துவ அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தனர். நேற்று பெப்ரவரி 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இவர்களில் யாழ்ப்பாணம்...

இறுதி சடங்கு மற்றும் திருமண நிகழ்வுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு செய்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று (15) இரவு கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் திருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்ள...

கோரோனா தொற்றால் பாதித்த மாணவி பரீட்சை எழுத யாழ்.பல்கலை நிர்வாகத்தால் ஏற்பாடு!!

கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி கோவிட்- 19 சிகிச்சை நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப் பீட மாணவி தனது ஆண்டு இறுதிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பதுளையைச் சேர்ந்த கலைப்பீட மாணவி ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில்,...

பொத்துவில்- பொலிகண்டி பேரணி: யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் பேரணியில், நீதிமன்ற கட்டளையை மீறி யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டமையினால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றில், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு பதில் நீதவான் முன்னிலையில் நேற்று...

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்த மறு அறிவித்தல் வரை தடை

பாடசாலைகளில் நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவ்வாறு நிகழ்ச்சிகளை நடத்துதற்கு மீள் அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அனைத்து மாகாண, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கும் கல்வியமைச்சின் செயலாளரினால்...

வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று

வடக்கு மாகாணத்தில் நேற்று (திங்கட்கிழமை) மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்களில் 5 பேர் மன்னார் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை பணியாளர் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 416 பேரின்...