. February 8, 2021 – Jaffna Journal

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் பொதும்மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி!!

மார்ச் 1ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே... Read more »

நள்ளிரவில் வீடுபுகுந்து வாளால் வெட்டி தாலிக்கொடி கொள்ளையிட்ட மூவர் சிக்கினர்!!

நாள்ளிரவில் வீடு புகுந்து குடும்பத்தலைவரை வாள் மற்றும் கத்தியால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு 6 பவுண் தாலிக்கொடியை கொள்ளையிட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கோண்டாவில் செபஸ்தியான் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு... Read more »

எரியும் தீயில் எண்ணையை வார்ப்பதுபோல வடக்கு கிழக்கில் போராட்டம் – இராணுவ தளபதி

புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டே, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தொலைக்காட்சி நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும்... Read more »

கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் சிலருக்கு கொரோனா – ஏனைய ஊழியர்களின் அச்சத்தினால் பதற்றம்

கிளிநொச்சி அறிவியல் நகரில் இயங்கி வரும் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் பணியாற்றிய ஏனைய ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) கடமைக்குச் சென்ற நிலையில், அவர்கள் தமது அச்சத்தினை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத... Read more »

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

பாடசாலை ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார பிரிவிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறித்த... Read more »

சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து... Read more »

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை!!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். ஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப்... Read more »

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை செயல்முறைத் தேர்வு இடைநிறுத்தம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயல்முறை தேர்வுகள் இந்த முறை இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பிக்கத்... Read more »

27 அத்தியாவசியப் பொருட்களுக்கான அதிரடி விலை குறைப்பு இன்று முதல்

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையின் நிர்ணய தன்மை எதிர்வரும் மூன்று மாத காலத்துக்கு நிலையாக பேணப்படுவதுடன், இடைப்பட்ட காலத்தில் தெரிவு செய்யப்பட்ட 27 அத்தியாவசிய பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்று வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

‘மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்’: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!

வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நேற்றையதினம் பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களால் பிரகடனம் வாசிக்கப்பட்டது. குறித்த பிரகடனத்தில்,... Read more »

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று- மூன்று மாவட்டங்களில் கண்டறிவு!

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில், 11 பேர் மன்னார் முசலியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 403 பேரின் மாதிரிகள்... Read more »