Ad Widget

மார்ச் முதலாம் திகதி தொடக்கம் பொதும்மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி!!

மார்ச் 1ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 நிலையங்களில் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் இராஜாங்க அமைச்சர் திருமதி. சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இதுவரையிலும் சுகாதார துறையினர், முப்படையினர் மற்றும் பொலிஸார் உட்பட 1 இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இனிவரும் நாட்களில் ஒரு நிலையத்தில் 300 நபர்கள் என்ற ரீதியில் , 2000 நிலையங்களில் தினமும் 600,000 பேருக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்கனவே இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மேலும் கோவக்ஸ் தடுப்பூசியினை இலங்கைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மார்ச் மாதத்திற்கு முன்னர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதன்பிறகு இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மேலும் தெரிவித்தார்.

Related Posts