Ad Widget

மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றில் தடை உத்தரவு பெற்ற பொலிஸார்

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் நான்கு நாள்களுக்கு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் இன்று புதன்கிழமை தாக்கல் செய்த விண்ணப்பங்களுக்கே இந்த தடை உத்தரவு...

வடக்கில் இதுவரை 7,925 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது!!

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கான கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் நான்காம் நாளில் 704 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று வரையான கடந்த நான்கு நாட்களில் வடக்கில் ஏழாயிரத்து 925 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்...
Ad Widget

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி- உத்தேச நேர அட்டவணை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் எதிர்ப்பினையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது. தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில், பேரணி பொத்துவிலில் இன்று தொடங்கி எதிர்வரும்...

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் முன்னெடுப்பு

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது ஆதரவினை அண்மையில் வழங்கியிருந்தது. சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர்...

எம்மிடம் துப்பாக்கி இல்லை; இராணுவமே சுட்டது- வவுனியாவில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பு!

இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி இராணுவமே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக செட்டிக்குளம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா செட்டிக்குளம் பேராறு காட்டுப் பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு இளைஞர்கள் தப்பிச்சென்றிருந்தனர். குறித்த இளைஞன் உட்பட...

மியான்மரை போல இலங்கையிலும் இராணுவப் புரட்சி அரங்கேறலாம்: எச்சரிக்கிறார் ஐங்கரநேசன்

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை தொடங்கி உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ள இந்த ஜனநாயகப் படுகொலையை இலங்கை மக்கள் தங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்....

எமது பிரதேசங்களில் தற்கொலைகளைத் தவிர்க்க அபயம் நிறுவனத்தின் சேவையை நாடுவோம்!!

வடக்கு – கிழக்கில் தற்கொலைகளை தடுத்து நிறுத்த அனைவரும் அபயம் நிறுவனத்துடன் இணைந்து சமூகப் பொறுப்புடன் செயற்படுமாறு இந்து சமயத் தலைவர்கள் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தோண்டுநாத சுவாமிகள் மற்றும் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணப் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் அதன் உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாத...

இலங்கைக்கு 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானம்!

கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை நாட்டிற்கு வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் (AstraZeneca Covishield) அஸ்ட்ராஜெனகா கொவிஸீல்ட் தடுப்பு மருந்துகள் இலவசமாக கிடைக்கவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தென்கிழக்காசிய வலயத்திற்கான பிரதிநிதி, விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் தெரிவித்துள்ளார். அதன்படி முதல் கட்டத்தில்...