Ad Widget

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி- உத்தேச நேர அட்டவணை!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் எதிர்ப்பினையும் மீறி பொத்துவிலில் இருந்து ஆரம்பமானது.

தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி வடக்கு கிழக்கு மாகாண சிவில் அமைப்புகளின் கோரிக்கைக்கு இந்தப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில், பேரணி பொத்துவிலில் இன்று தொடங்கி எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணம் பொலிகண்டியில் நிறைவடையவுள்ளது. இந்தப் போராட்டத்தின் உத்தேச நேர அட்டவனை பின்வருமாறு,

04.02.2021

4.00 மணி மாலை கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி புறப்படல்.
4.30 மணி மாலை – கொகம்பகஸ் சந்தியில் (நாயாறு) கிழக்கு பவனியை சந்தித்தல்.
5.30 மணி மாலை முல்லைத்தீவு நகரத்தைச் சென்றடைவதுடன் இரவு தங்குமிடம் – உணவு – முல்லைத்தீவு

05.02.2021

6.00 மணி – காலை–முல்லைத்தீலிலிருந்து புறப்படல்
7.00 மணி – காலை – வற்றாப்பளை
8.00 மணி – காலை – முள்ளியவலை
9.00 மணி- காலை – ஒட்டுசுட்டான்.
10.00 மணி காலை – நெடுங்கேணி
11.00 மணி காலை – புளியங்குளம்
12.00 மணி மதியம் – வவுனியா நகரம்
02.00 மணி மதியம் – செட்டிக்குளம்
03.00 மணி மாலை – மடு வீதி
04.00 மணி மாலை – முருங்கன்
06.00 மணி மாலை – மன்னார்
காலை உணவு – முல்லைத்தீவு
மதிய உணவு – வவுனியா
இரவு உணவு – மன்னார்
தங்குமிடவசதி, போக்குவரத்து, தொடர்பு.

06.02.2021
6.00 மணி காலை –மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் நோக்கி
7.00 மணி காலை – வெள்ளாங்குளம்
7.30 மணி காலை – துணுக்காய்
8.00 மணி காலை – மாங்குளம்
9.00 மணி காலை – முறிகண்டி
10.00 மணி காலை – கிளிநொச்சி
11.00 மணி மதியம் – பரந்தன்
12.00 மணி மதியம் – பளை
01.00 மணி மதியம் – சாவகச்சேரி
02.00 மணி மாலை – யாழ்ப்பாணம்
03.00 மணி மாலை -நெல்லியடி
4.00 மணி மலை – பொலிகண்டி
காலை உணவு – துணுக்காய்
மதிய உணவு – சாவகச்சேரி
இரவு உணவு – யாழ்ப்பாணம்

என போராட்ட உத்தேச நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts