Ad Widget

சுகாதாரத் துறையினர், படையினர் 300,000 பேருக்கு 3 வாரத்துக்குள் கோவிட் -19 தடுப்பூசி ஏற்றப்படும்

முதன்மைக் குழுவாக அடையாளம் காணப்பட்ட 3 லட்சம் நபர்கள் மூன்று வார காலத்திற்குள் இரண்டு அளவு கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் மற்றும் கோவிட் -19 நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே இதனைத் தெரிவித்தார்....

எனது பிள்ளைகள் வீழ்ந்து இறந்த குழியை மூடாமல் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கின்றனர்- தந்தை குற்றச்சாட்டு

எனது பிள்ளைகள் இருவர் வீழ்ந்து இறந்த குழியை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும், அதனை மூடுவதற்குரிய நடவடிக்கையினை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்காதுள்ளதாக யாழ்ப்பாணம் மண்டைதீவைச் சேர்ந்த தந்தையொருவர் கவலை வெளியிட்டுள்ளார். அத்தோடு தனது குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பான நஷ்டஈடும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
Ad Widget

எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கத்தின் அறிவிப்பு!

எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தை செல்லுபடியற்றதாக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இந்நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானம்...

க.பொ.த. சாதாரணதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பாடசாலையில் இணைய வாய்ப்பு!!

பாடசாலைகள் தொடங்கப்படுவதன் மூலம் மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து க.பொ.த. சாதாரணதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. அதன்படி,பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று தற்காலிகக் கல்வியைப் பெறுவதற்கான வசதிகள் உள்ளன என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது. “தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு,...

யாழில் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிப்பு!!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நெடுந்தூர பேரூந்து நிலையத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன் குற்றம் சாட்டியுள்ளார். அத்தோடு, தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படாது விட்டால், தான் பேரூந்து நிலைய திறப்பு விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை. ஏன் எனில் எங்ளுடைய மொழி புறக்கணிக்கப்படும் இடத்தில் நான் கலந்துகொள்வது பொருத்தம் இல்லை எனவும் தெரிவித்தார். குறித்த...

இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழிலும் போராட்டம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்திலும் போராட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இந்திய மத்திய அரசே உணவளிக்கும் உழவனின் உயிரோடு விளையாடாதே உலகமே எதிர்த்து நிற்கும் இனி உன்னை’, ‘விவசாய...

சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு அரசியல் விபச்சாரி – கஜேந்திரகுமார்

ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

இலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா தொற்று!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்புக்கள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேர் கடந்த...

யாழில் அபிவிருத்திகளை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவு கோரல்!

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....