க.பொ.த. சாதாரணதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள பாடசாலையில் இணைய வாய்ப்பு!!

பாடசாலைகள் தொடங்கப்படுவதன் மூலம் மாவட்டங்களுக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான போக்குவரத்தை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து க.பொ.த. சாதாரணதர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

அதன்படி,பாடசாலை கொழும்பு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அருகிலுள்ள பாடசாலைக்குச் சென்று தற்காலிகக் கல்வியைப் பெறுவதற்கான வசதிகள் உள்ளன என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகிறது.

“தற்போதைய சூழ்நிலையை எதிர்கொண்டு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதியுடன் இந்த வாய்ப்பு வழங்கப்படும்.

அதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகிலுள்ள பாடசாலையில் இணைந்து கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்” என்று கல்வி அமைச்சின் செயலாளர், கபில பெரேரா தெரிவித்தார்.

Related Posts