Ad Widget

இணைய மோசடிகள் தொடர்பில் மத்திய வங்கி எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்தும் விண்ணப்பங்கள் மூலம் பல வகையான நிதி மோசடிகள் மற்றும் மோசடிகள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த மோசடிகளில் பெரும்பாலானவை ஒன்லைன் அல்லது தொலைபேசி பயன்பாட்டு அடிப்படையிலான எளிதான கடன் திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஈர்ப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து...

வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு விளக்கமறியல் உத்தரவு!

வவுனியா நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் இன்று நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுங்கேணி வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்ப்படுத்தி வந்ததுடன் தொல்பொருட்கள்...
Ad Widget

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி!

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை செலுத்துவது மிகச் சிறந்தது என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். உலக...

கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை- வைத்தியர் சி. யமுனாநந்தா

கொவிட் நோயினை இல்லாது செய்வதற்கு சுகாதாரப் பழக்க வழக்கங்களை தவறாது கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகுமென வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தற்போது உலகில் கொவிட் வைரஸ் பரம்பலில், மூன்று வகையான விகாரமடைந்த கொவிட் வைரஸ்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வேகம் குறைவாகக் காணப்பட்டாலும் புதிதாக மாற்றமடையும் அவ்வாறு உருமாறிய...

யாழ்.பல்கலை. மாணவிக்கு கோரோனா தொற்று; கிளிநொச்சியில் மூவர், சங்கானையில் ஒருவரும் பாதிப்பு

கிளிநொச்சி 3 பேருக்கும் யாழ்ப்பாணத்தில் இரண்டு பேருக்கும் என வடக்கு மாகாணத்தில் 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றையதினம் வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும் மாத்தளையைச் சேர்ந்த மாணவி என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட...

யாழில் பயணிகள் பஸ்ஸொன்றும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு 11.15 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸானது, பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப் போக்குவரத்து சபை பயணிகளை இறக்கிவிட்டு பஸ் கோண்டாவில் சாலைக்கு செல்லும்போது யாழ்...