யாழ்.நகரில் சுகாதார நடைமுறைகளை மீறியதால் திரையரங்குக்கு சீல்!!

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. எனினும் யாழ்ப்பாணம் நகரில் மூடப்பட்ட திரையரங்கு...

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கிலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் விடுவிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து விடுதலை செய்து ( Acquitted and Released) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்த குற்றச்சாட்டில்...
Ad Widget

வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 146 ஆக பதிவு

வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு...

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கு புதிய வகை கொரோனா அடையாளம்

பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்தானியா மற்றும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காணப்படுவதாக தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். வௌிநாடுகளில் இருந்து...

தைப்பொங்கல் திருநாளை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள்; சுகாதார அமைச்சு

தைப்பொங்கல் திருநாளை வீட்டிலிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு கேட்டுள்ளது. ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப அடுத்த ஆறு மாதங்களில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வலியுறுத்தினார். இன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க சரியான...

முள்ளியவளையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது!!

முள்ளியவளை நாவல்காட்டு கிராமத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநரின் நிபுணத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நபர் 6 மாதங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமையும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில்...

ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும்

புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் இத்தகைய தியாகங்களைச் செய்ய வேண்டும் என கூறினார். கொரோனா வைரஸிலிருந்து...

யாழில் மழை காரணமாக 358 குடும்பங்கள் பாதிப்பு!!

யாழ். மாவட்டத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 358 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழை தாக்கத்தின் காரணமாக 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் ரீ.என்.சூரியராஜா மேலும்...