Ad Widget

வரலாற்று பெருமை மிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீள் உருவாக்கம்!!

வரலாற்று பெருமை மிக்க யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் நேற்று (23) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு...

மருதனார்மடம் சந்தைக் கொத்தணி வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியது என எச்சரிக்கை!

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (புதன்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது....
Ad Widget

மருதனார்மடம் கொரோனா கொத்தணி 100ஐ கடந்தது – கிளிநொச்சியிலும் தொற்று!

யாழ்ப்பாணத்தில் ஒன்பது பேருக்கும் கிளிநொச்சியில் ஒருவருக்குமாக வடக்கில் நேற்று மட்டும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் ஆகிய இரண்டு கூடங்களிலும் 601 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே 10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது....

யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் குறித்து கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்தது முன்னணி!

யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு, நல்லூர் பிரதேச சபைக்கும் புதிய வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்கத் தயாராக இருப்பதாக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிய கட்டுப்பாடுகள்? – இராணுவத் தளபதியின் அறிவிப்பு

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலத்தில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான எந்தத் திட்டமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் பயணங்களை கட்டுப்படுத்துமாறும் அவர் கூறியுள்ளார். இதேநேரம், நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில்...

பாடசாலை மாணவர்கள் அனைவரும் வகுப்பேற்றப்பட வேண்டும் – முக்கிய அறிவிப்பு

2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நிறைவடையும்போது, அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு வகுப்பேற்றப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. இதன்படி 2021 ஆம் ஆண்டு முதலாம் தவணையின்போது,...

இலங்கையில் 4 கொரோனா மருந்துகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது. நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல...