Ad Widget

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவு!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் 42 ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த 80 வயதுடைய பாணந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் முகாமில் IDH வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டது!

கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை (Infectious Disease Hospital for Northern Province) கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (11) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட இவ் வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன்...
Ad Widget

யாழ்.மாவட்டத்திற்குள் வருபவர்கள் சுகாதாரப் பிரிவினரிடம் பதிவு செய்யவும்!

கொரோனா பாதிப்புள்ள அபாய வலயங்களிலிருந்து புதியவர்கள் யாரும் வந்தால் அவர்கள் கட்டாயமாக சுகாதாரப் பிரிவினரிடம் பதிவுகளை மேற் கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன்தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “யாழ்...

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் உள்நாட்டு ஆடையை அணிய வேண்டும் – தயாசிறி ஜயசேகர

அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்கள் பத்திக் அல்லது கைத்தறி நெசவுத் துணிகளால் தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதற்குரிய வேலைத்திட்டம் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து...

முல்லைத்தீவில் மனித எச்சங்கள், புலிகளின் இலக்கத் தகடுகள் கண்டெடுப்பு!

முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் மனித எச்சங்கள், கைக்குண்டு மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய குறித்த இடத்தில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் விடுதலைப் புலிகளின் இலக்கம் பொறிக்கப்பட்ட தகடுகள், உடைகள் போன்றனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு, கரிப்பட்ட முறிப்புப் பகுதியில் வயல் நிலத்தை உழுது பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் வரம்பு கட்டும்போது மனித...

யாழ். பல்கலை மருத்துவ பீடத்தில் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம்

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று (புதன்கிழமை) முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் பி.சி.ஆர் பரிசோதனை ஆய்வு கூடம் மருத்துவ பீடத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, தனியான பாதை அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. மருத்துவ பீடத்தில் இருந்து...

பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

அரச, தனியார் பேருந்துகளின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்று அபாய நிலைமை காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 1.2 வீதத்தால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் தீர்மானத்திற்கு அமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 12 ரூபாயில் இருந்து...

கொரோனா தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் உயிரிழப்பு – மொத்த எண்ணிக்கை 41 ஆக பதிவு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ராகமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் தனது வீட்டிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட...