Ad Widget

கிளினிக் நோயாளர்களுக்கு வீடுகளுக்கே மருந்துகள் பொதி விநியோகிக்கும் பணி நாளை ஆரம்பம்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் நடைமுறையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு போதுமான மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்க இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து சுகாதார அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல் (05.11.2020) நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து மாதந்த கிளினிக்கில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் விநியோகம் மீண்டும்...

மன்னாரில் கிராம உத்தியோகத்தர் வெட்டிக் கொலை?

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பை கடவை கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் (வயது-55) என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவம் இடம் பெற்ற பகுதிக்கு மன்னார் மாவட்ட பதில் நீதவான்...
Ad Widget

இந்தியாவில் இருந்து படகு மூலம் வந்தவர் கீரிமலயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்!!

இந்தியாவின் இராமேஸ்வரம் ஈழத் தமிழர் அகதி முகாமில் இருந்த ஒருவர் தப்பி ஓடி வந்து கீரிமலையில் நின்ற சமயம் நேற்றைய தினம் இனம் கானப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கி தலைமன்னார் கடற்கரையில் 2ஆம் திகதி அதிகாலை கரை இறங்கியுள்ளார். இவ்வாறு கரை இறங்கியவர் அங்கிருந்து மன்னார் நகரை அடைந்துள்ளார்....

யானை தாக்கி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் சாவு!

மாங்குளம் நகருக்கு அருகில் மல்லாவி வீதியில் யானை தாக்கி யாழ்ப்பாணத்தைச் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. “சம்பவத்தில் கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த ஆனந்தராசா விஜயானந்தன் (வயது- 37) என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார். தச்சுத்தொழிலாளியான அவர் மல்லாவி , கொள்ளவிலாங்குளம் பகுதிக்கு தொழில் நிமித்தம் சென்று விட்டு நேற்று...

யாழ். நகரில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டது!

யாழ் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த கடைகள் இன்று ( புதன்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. கொழும்பிலிருந்து வருகை தந்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவரின் உறவினர்களின் நான்குகடைகள் யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரியினால் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கடை உரிமையாளர்களுக்கு முதலாவது PCRபரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் குறித்த...

கொரோனோ தொற்றாளருடன் பயணித்தவர்களை இனம் காண நீதிமன்றை நாடியுள்ள பொலிஸார்

யாழில் கொரோனோ தொற்றுடன் தொடர்புடைய நபர்களுடன் பேருந்தில் பயணித்த ஆறு பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை இனம் கண்டு தனிமைப்படுத்த யாழ்ப்பாண பொலிஸார் நீதிமன்றை நாடியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் கடந்த 30ஆம் திகதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என அறியப்பட்ட வெள்ளவத்தை உணவக உரிமையாளர், மற்றும் அவருடன் பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையைச் சேர்ந்த ஒருவரும்...

திருநெல்வேலி சந்தை, கொக்குவில் சந்தை ஆகியவற்றை மூடும் நிலை!!

சுகாதார நடைமுறைகளை மீறி தொடர்ந்தும் அசண்டையீனமாக நடந்துகொண்டால் திருநெல்வேலி மற்றும் கொக்குவில் சந்தைகள் பூட்டப்படும். என நல்லுார் பிரதேசசபை தவிசாளர் த.தியாகமூர்த்தி கூறியுள்ளார். கொரோனா அச்சம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழில் உள்ள பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தை மற்றும் கொக்குவில்...

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணம் கடல் நீரேரியிலிருந்து கடல்நீர் உட்புகுவதற்கு காரணம் என்ன? – மருத்துவர் சி.யமுனாநந்தா

யாழ்ப்பாணம் கடல் நீரேரி அண்மைய பௌர்ணமி நாளில் தரைப்பகுதிக்குள் அசாதாரணமாக ஊடுருவிய காரணம் பற்றிய கருதுகோள் தொடர்பில் மருத்துவர் சி.யமுனாநந்தா தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடரிபில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்றத்தின் அடிப்படையில் சுண்ணாம்புக் கற்பாறைகளால் ஆனது. இப்பாறைகளுக்கு இடையே மழைநீர் பருவகாலங்களில் தேங்கி வில்லை போன்ற கட்டமைப்பில் காணப்படுகின்றது. இவ்வில்லை போன்ற மழைநீர்...

இலங்கையில் பரவும் வீரியமான கொரோனா வைரஸ் – சமூக இடைவெளி குறித்து முக்கிய தீர்மானம் இன்று

இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸின் வீரியம் அதிகம் என்பதனால், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை பேணுவது போதுமானதா? அல்லது அதனை 2 மீற்றராக அதிகரிப்பதா? என்பது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து இன்று (பதன்கிழமை) தொழில்நுட்பக் குழு கூடி ஆராயவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்தக்...

யாழில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா தொற்று!

யாழில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒன்பது வயதுச் சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதான வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். உடுவில் – சங்குவேலியில் அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கே தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. கொழும்பு, கொட்டாஞ்சேனையில்...