Ad Widget

கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் அபாயநிலை உள்ளமை உண்மையே- இராணுவத்தளபதி

கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பின் சில பகுதிகளில் 7 நாட்கள் வரையில் ஊரடங்கு...

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Ad Widget

மணிவண்ணனை யாழ்.மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க இடைக்காலத் தடை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய...

யாழ்ப்பாணத்தில் பயன்பாடின்றி உள்ள காணிகளை அபகரிக்கும் கும்பல்!!

யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாமல்- பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி மற்றும் வாழ்வாதாரத்திற்கு பிரதேச வளங்களை பயன்படுத்தல் எனும்...

நீங்கள் பயணிக்கும் பேருந்து இலக்கங்களை நினைவில் வைத்திருங்கள்!

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் மக்கள் தாம் பயணிக்கும் பேருந்துகளின் இலக்கத்தை நினைவில் வைத்திருக்குமாறு பொலிசார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், பேலிகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய ஏராளமான நோயாளிகள் பொது போக்குவரத்தில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. எனினும், பேருந்து இலக்கங்களை அடையாளம் காண்பதில் சிரமம் உள்ளது. எதிர்காலத்தில் தடமறிய பேருந்து இலக்கங்களை நினைவில்...

யாழ். பல்கலைக்கழக வெளிவாரிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு!

கொரோனாப் பெருந்தொற்று அச்சத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக வெளிளிவாரிப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படும் வணிகமாணி (வெளிவாரி) மூன்றாம் வருட, இரண்டாம்...

நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை மக்கள் வழங்கவில்லை – பிரதி பொலிஸ்மா அதிபர்

வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மக்கள் தாமாக உணர்ந்து செயற்பட வேண்டும். நாம் எதிர்பார்த்த ஒத்துழைப்பை அந்த மக்கள் வழங்கவில்லை. என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள்...

வேகக்கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து!! சாரதி சாவு!!

அச்சுவேலி – இராசபாதை வீதியில் கட்டுப்பாட்டையிழந்த கார் மின்கம்பத்துடன் மோதியதில் சாரதி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் அச்சுவேலி குட்டியபுலத்தைச் சேர்ந்த சீலன் (வயது -31) என்பவரே உயிரிழந்தார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வேகக்கட்டுப்பாட்டையிழந்த மாருதி...

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அறிவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நபர்கள் உள்ள வீடுகளில், மற்றுமொரு அறிவித்தலையும் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார். சுகாதார அதிகாரிகளின் அறிவித்தல்களுக்கு மேலதிகமாக, இந்த அறிவித்தலையும் காட்சிப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவித்தலுக்கு அமைய, குறித்த வீடுகளில் தங்கியிருப்பவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாது என்பதுடன், வெளி...

யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு!

யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.