Ad Widget

நாட்டில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது!

நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் 22 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆறு பேர் பேலியகொட மீன் சந்தைத் தொழிலாளர்கள் எனவும் ஏனைய 22 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள்...

வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியாளர்களில் மேலும் இருவருக்கு கோரோனா!!

வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் இரண்டு தொழிலாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மூவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபடும் 5 தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். வவுனியா பிராந்திய சுகாதார...
Ad Widget

மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தின் முன்னுள்ள வேகத்தடை அருகில் தங்கச்சங்கிலி வழிப்பறிக்கொள்ளை

யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது , வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாயும் மகளும் மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு முன் வீதியில் போடப்பட்டிருந்த வேகத்தடைக்கான உயரத்தில் வேகத்தை குறைத்தவேளை திடீரென அவ்வழியால் மோட்டார் சைக்கிளில்...

பெண் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை; உதவிக் கல்விப் பணிப்பாளர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு

வடமாகாண மும்மொழிக் கற்கைகள் நிலையத்தில் பணியாற்றும் குடும்பப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உதவிக் கல்விப் பணிப்பாளரை பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசியல் தலையீடுகள் காரணமாக குடும்பப் பெண்ணின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் தலைமையகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏற்க மறுத்த நிலையில், பொலிஸ் மா...

சமூக பரவல் கட்டத்தில் இலங்கை!! அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

மினுவாங்கொட கொரோனா கொத்தணியிலிருந்து, துணைக் கொத்தணிகள் உருவாகுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க (GMOA) செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே இதனை தெரிவித்தார். “வைரஸ் சமூக பரவலுக்கு வழிவகுக்குமா அல்லது அது ஏற்கனவே சமூக மட்டத்தில் பரவியிருக்கிறதா என்பதை அடையாளம் காண நிலைமையை கண்காணிக்க...

நாட்டில் நேற்று 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் நேற்றையதினம் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 166 பேருக்கும் வெளி நாட்டிலிருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,464 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நட்டில்...

வட மாகாணத்தில் வசிப்பவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் – வைத்தியர் கேதீஸ்வரன்

பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகத்தினர் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொரோனா வைரஸ் பரவல் நாட்டில் தற்போது தீவிரமடைந்துவரும் நிலையில் ,இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்தவதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது. ஆகையால் வடமாகாணத்தில் பின்வரும் செயற்பாடுகளை...

கொழும்பில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு!!

கொழும்பு மாவட்டத்தில் ஐந்து பொலிஸ் பரிவுகளுக்கு உடடினாய அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டி, புளூமெண்டல் மற்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்கு உத்தரவானது அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த வியாபார நிலையங்களுக்கு பூட்டு!

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மூன்று வியாபார நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப்...