Ad Widget

நாட்டில் மேலும் 60 பேருக்கு கோரோனா!!

நாட்டில் மேலும் 60 பேர் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்.20) கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவத் தளபதி வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகள் இரண்டைச் சேர்ந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை 259 கோவிட் -19 நோயாளர்கள்...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம்!!

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவி வறிதாகியுள்ளதாக அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர், இ.கி.அமல்ராஜ், இதுதொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு வெளயிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமை முடிவுறுத்தப்பட்டுள்ளது என அந்தக் கட்சியின் செயலாளரால் கடந்த 13ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,...
Ad Widget

சுமார் ஒன்றரை இலட்சம் தொற்றாளர்கள் சமூகத்தில் காணப்படலாம்!! – நளின் பண்டார

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் சமூகத்தில் காணப்படலாம். எனவே அரசாங்கம் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர். பரிசோதனைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , குருணாகல்...

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றி வீடு சென்ற கடற்படை சிப்பாய்க்கு கொரோனா

கண்டி கட்டுகஸ்தோட்ட பொலிஸ் பிரிவில் உள்ள ராஜபிஹில்லா (Rajapihilla) பகுதியில் வசிக்கும் 21 வயதான பெண் கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர் காங்கேசந்துறை பகுதியில் உள்ள ஒரு கடற்படை முகம் ஒன்றில் பணிபுரிவதாகக் கூறப்படுவதுடன் இவர் விடுமுறையில் தனது வீட்டிற்கு...

மருதங்கேணி கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் 21 பேர் அனுமதி!!

மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு 21 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடயைச் சேர்ந்தவர்கள் வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை நேற்று கண்டறியப்பட்டது. அவர்கள் 21 பேரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் நேற்று இரவு சேர்க்கப்பட்டனர்....

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி சேவையில் ஈடுபட்டுவரும் சாரதி!

அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்கு வரத்து சேவைக்கு சொந்தமான பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களத்தினால் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் சாரதியை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குட்படுத்தாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கண்டி பேருந்து சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினால் விடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சட்ட...

காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

காலவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லை டிசெம்பர் 31ஆம் திகதிவரை நீடிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படும் நடவடிக்கைகள் காரணமாக இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் இளையோருக்கு வேலைவாய்பு – 34, 818 பேருக்கு பயிற்சியாளர் நியமனம் வழங்கப்பட்டது

மிகக் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சம் இளையோருக்கு அரச வேலைவாய்ப்பை வழங்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை நேற்றையதினம் (ஒக்.19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 34 ஆயிரத்து 818 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நியமனம் பெறுபவர்கள் தங்கள் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட 25...

புங்குடுதீவு தனிமைப்படுத்தலில் இருந்து இன்று காலை விடுவிப்பு!!

புங்குடுதீவில் கடந்த 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர், க. மகேசன் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது. அதனடிப்படையில் புங்குடுதீவு...

பௌத்த மத மேம்பாட்டுக்காக இந்தியா வழங்கிய நிதி தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது!!

பௌத்தத்திற்கான நிதி, ஆயுதப் படைகளுக்கு பயிற்சிக்காக வழங்கப்படும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட கூடாது என்ற உத்தரவாதத்தை இலங்கை அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக...

யாழில் கொரோனா பரவல் நிலமை கட்டுப்பாட்டுக்குள்- மாவட்டச் செயலாளர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நிலமை கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றது என மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போதைய நிலமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை...