Ad Widget

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் தடை; நீடிப்பதா, நீக்குவதா? – வியாழனன்று கட்டளை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை வழங்க்கப்படும் என நீதிவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. எதிர்மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆவணங்களை சமர்ப்பித்து பொலிஸாரின் வாதத்துக்கு சரியான சட்ட ஏற்பாடுகளை முன்வைக்காத நிலையில்...

இலங்கையில் பொலிஸ் வரலாற்றில் முதல் பெண் டிஐஜி நியமனத்துக்கு ஒப்புதல்!!

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன்முறையாக பெண் மூத்த பொலிஸ் அதிகாரியை பிரதிப் பொலிஸ் மா அதிபராக (டி.ஐ.ஜி) பதவி உயர்வு செய்ய தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. 9 பெண் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்களின் (எஸ்.எஸ்.பி), பெயர்களை பதில் பொலிஸ் மா அதிபர் சந்தனா விக்ரமரத்ன தேசிய பொலிஸ் அத்தியட்சகருக்கு பிரதிப் பொலிஸ் மா...
Ad Widget

மனுக்களை மீளப்பெற்றால் திலீபனை நினைவுகூரலாம் – சி.வி.கே. சிவஞானம்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீளப்பெறப்பட்டால் தமிழ் மக்களால் திலீபனின் நினைவேந்தலை நினைவுகூர முடியுமென வட.மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கமானது, பொதுவான அரசியல் தீர்மானமொன்றை எடுத்து பொலிஸாரின் மூலம் இந்த மனுக்களை நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...

விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு; நிசா விக்டர் கைது – செம்மணியில் குண்டுகள் மறைத்து வைத்துள்ளதாகவும் வழக்கு

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆவா வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நிசா விக்டரை வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு செம்மணி பகுதியில் கைக்குண்டு மற்றும் ஜொனி ரக மிதிவெடி என்பனவும் நிசா விக்டரால் மறைத்து...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடன் வசதியை பெற்றுக் கொடுக்க தீர்மானம்

பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கு மடிக்கணினியை கொள்வனவு செய்வதற்கு தேவையான கடன் வசதியை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரச வங்கிகளுடன் இணைந்து இந்த கடன் வசதியை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் சலுகை கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளது. அத்தோடு, பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின்னர்...

இராணுவம் அச்சுறுத்துவதாக வவுனியா மக்கள் குற்றச்சாட்டு!!

வவுனியா- வடக்கின் தனிக்கல்லு பிரதேசத்தில் அமைந்துள்ள வயல் நிலங்களிற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக பிரதேச ஒருங்கிணைப்பு குழுவில் குற்றம் சாட்டப்பட்டது. வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், “தனிக்கல்லு பகுதியில் அமைந்துள்ள எருக்கலம்...

கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்- மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா...