Ad Widget

சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன்! – பவதாரணி

“சசிகலாவிற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுப்பேன்” என பவதாரணி ராஜசிங்கம் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மக்களின் அன்பை பெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே நாடாளுமன்றம் செல்லவேண்டும். இதனடிப்படையிலேயே தேர்தல் நடாத்தப்படுகின்றது. ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மாற்ற முனைவது அபத்தமானது. ஆமாம்...

இணைந்து செயற்பட வருமாறு கஜேந்திரகுமார், விக்கிக்கு சுமந்திரன் பகிரங்க அழைப்பு

வடக்கில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இல்லையெனில் நாடாளுமன்றில் தாம் அவர்களோடு இணைந்து செயற்படவும் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
Ad Widget

மாமனிதர் ரவிராஜின் உருவச் சிலை கறுப்புத் துணியால் மூடி நீதிகேட்டுப் போராட்டம்!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் உருவ சிலையின் முக பகுதி கறுப்பு துணியால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் நடராஜா ரவிராஜின் பாரியார் சசிகலா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இருந்தார். தேர்தல் முடிவுகள்...

யாழ் மத்திய கல்லூரியில் சுமந்திரனின் அதிரடிப்படையின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் காயம்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இறுதி இரு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணிக்கை தொடர்பில் நள்ளிரவு தாண்டியும் பாரிய குழப்பம் நீடித்து பதற்ற நிலை ஏற்பட்டத்தை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் மீது அதிரடி படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழில் கூட்டமைப்புக்கு கிடைத்த ஆசனங்கள் மூன்றில் முதல் ஆசனத்தை சிறிதரன் வென்றிருந்தார். இந்நிலையில் ஏனைய இருவர் சசிகலாவா, சித்தார்த்தனா என்ற...

தேசியப் பட்டியலில் ஆசனங்களைப் பெற்ற கட்சிகளின் விபரம் வெளியானது..!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப்பட்டியலில் ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதனைவிட, தேசிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், மற்றும் எங்கள் மக்கள்...

விருப்பு வாக்கு அறிவிப்பில் சந்தேகம்: தேர்தல் ஆணையாளரிடம் முறையிடத் தீர்மானம்- சசிகலா அறிவிப்பு

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக தனது விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குழறுபடி ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சசிகலா ரவிராஜ், இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது...

யாழ். மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள்

2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான யாழ். மாவட்டத்திற்கான முழுமையான விருப்பு வாக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 3 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுள்ளன. இதன்...

திருநெல்வேலியில் வீடொன்றில் தீ; வயோதிபப் பெண் சாவு!

திருநெல்வேலியில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...

பெருவெற்றியை நோக்கி ராஜபக்ச அன் கோ; யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்புக்கு பின்னடைவு

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபகசக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 9ஆவது நாடாளுமன்றத் தேர்தல்...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்வைத்துள்ள அவசர கோரிக்கை

வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டை ஒளிப்படம் பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு சிலர் வாக்குசீட்டை ஒளிப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தல் வாக்களிப்பு நிலையங்களின் வெளிப்புற மற்றும் உட்புற காட்சிகளை இன்று மாலை 5.00...

தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நான்கு பேரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த நால்வரும் மதுபோதையில் சுயேச்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு கற்களால் எறிந்தும் வேலிகளை அடித்து உடைத்தும் அட்டக்காசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது வீட்டின்...

வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் வாக்களிக்கலாம் – முக்கிய அறிவிப்பு

வாக்குச் சீட்டுகளைப் பெறாதவர்களும் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையதளத்தில் தங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அவர்களின் பெயர்கள் தேர்தல் பதிவேட்டில் உள்ளதா என சரிபார்க்கலாம் அல்லது கிராம சேவகர்கள் வைத்திருக்கும் தேர்தல் பட்டியலில் பெயர்கள் இருந்தால், அதனை பெற்று சரியான அடையாளத்துடன் வாக்களிக்கலாம்...

குழப்பம் விளைவிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்த பொலிஸாருக்கு அனுமதி

நடைபெறுகின்ற பொதுத்தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் ஆயுத மேந்திய தலா...

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்!

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது. சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இம்முறை தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இம்முறை...

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேர் அடுத்த ஒரு மாதத்தில் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்!!

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும்...

நாளை பொதுத்தேர்தல்: எப்படி வாக்களிப்பது?

க்கள் கட்டாயம் தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் ஒவ்வொரு மக்களும் பங்களித்திருக்க வேண்டும். சரியான நபர்களை இனம்கண்டு, பொதுமக்கள் வாக்களிக்காமல் இருப்பது, தவறானவர்களின் அரசியல் பிரவேசத்திற்கும் வழிவகுத்து விடும். வாக்களிக்க செல்லும் போது நாளை வாக்களிக்க செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்த செல்லுங்கள். முகக்கவசம்...

எம்.ஏ. சுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

எம்.ஏ.சுமந்திரனின் பல கருத்துக்கள், அறிக்கைகள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துவதாகவே உள்ளன எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இதனை மக்கள் புரிந்து கொண்டு செய்ய வேண்டியதனை செய்வார்கள் என்றுதான் நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=HncUNQ60H5E&feature=youtu.be சமீபத்தில் இலங்கை ஊடகவியலர்களிடையே இணையவழி செயலிமூலம் நடத்திய ஊடக சந்திப்பிலேயே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும்...

யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்றவருக்கு கோரோனா இல்லை; புதிய அறிவிப்பு – சுயதனிமைப்படுத்தப்பட்டோர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நபருக்கு கொழும்பில் மீளவும் இரண்டு தடவைகள் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால்...

கோப்பாய் பொலிஸாரின் அட்டூழியம் தொடர்கிறது!!

இராணுவ வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாகி காலில் காயமேற்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரம் தடுத்து வைத்துவிட்டு கோப்பாய் பொலிஸார் விடுவித்துள்ளனர். யாழ்ப்பாணம், கல்வியங்காடு, இராமசாமி பரியாரியார் சந்தியில் (பழம் சந்தி ) கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து இடம்பெற்றது. திருநெல்வேலி சந்தியில் பக்கம் இருந்து கல்வியங்காடு சந்தியை நோக்கி மோட்டார்...

பேனாக்கள் விநியோகிக்க வேண்டாம் – யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளர் கோரிக்கை

கட்சிகளின் சின்னங்கள் , வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேனாக்களை வாக்களர்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என கட்சிகளின் பிரதிநிதிகளிடம் யாழ்ப்பாணம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஏ.சி.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற கட்சி பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கேட்டுக்கொண்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இம்முறை...
Loading posts...

All posts loaded

No more posts