2015 ம் ஆண்டு முதல் தரம் 6 – 10 வரையான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்

gov_logதரம் 6 முதல் 10 வரையிலான பாடத்திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எட்டாம் தரத்திற்கு பின்னர் மேற்கொள்கின்ற பாடத்திட்ட திருத்தத்திற்கு புதிதாக 70- 75 வரையிலான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் கலாநிதி திஸ்ஸ ஹேவாவிதாரன தெரிவித்தார்.

அடுத்த வாரம் முதல் புதிய பாடப் புத்தகங்கள் எழுதும் பணி ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், அதற்காக தேசிய கல்வி நிறுவகம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் பங்களிப்புச் செய்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

அவ்வாறே பாடப்புத்தகங்களை எழுதியதன் பின்னர் அது குழுவொன்றிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அது தொடர்பான குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளதாகவும் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் கூறினார்.

புதிய பாடத்திட்டத்திற்கேற்ப தயாரிக்கப்படும் புதிய பாடநூலில் 2014ம் ஆண்டு நவம்பர் 30ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.