2012இல் 2411 புதிய சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகள் நிறுவப்பட்டுள்ளன: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

daklasகடந்த ஆண்டில் புதிதாக 2411 புதிய சிறிய மற்றும் மத்திய தர வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு வர்த்தக அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், 814 வர்த்தக நடவடிக்கைகள், மத்திய தரத்தையும், 62 நடவடிக்கைகள் பாரிய தரத்தையும் சேர்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். 50 மில்லியன் ரூபாவை தொழிற்படு மூலதன பெறுமதியாக கொண்ட வர்த்தக நடவடிக்கைகள், பாரிய வர்த்தக முயற்சிகளாகவும், 20 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான பெறுமதியை தொழிற்படு மூலதனமாக கொண்ட வர்த்தக முயற்சிகள் மத்திய வர்த்தக முயற்சிகளாகவும் கருதப்படுகின்றன.

அமைச்சின் மூலம் 1400இற்கும் அதிகமானோருக்கு பனைசார் தொழிற்துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 73,000 பனங்கன்றுகளை நடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அரசின் மூலம் 19 மில்லியன் ரூபா கித்துள் துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.