20ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது!!

ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயம் அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு நாடாளுமன்ற ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் படி மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை மீள வழங்கும் வகையில் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.

20ஆவது திருத்தச் சட்டவரைவு கடந்த 22ஆம் திகதி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றால் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor