Ad Widget

2.8 மில்லியன் ரூபா செலவில் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு

Jaffna Teaching Hospitalயாழ். போதனா வைத்தியசாலையில் 2.8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவிலுள்ள லீட்ஸ் சைன்டிஸ் அனல்தம் பார்மசிகளில் வைத்தியராகக் கடமையாற்றும் வீரவாகு முருகையா என்பவரின் தனிப்பட்ட நிதியொதுக்கீட்டில் இத்தீவிர சிகிச்சைப்பிரிவு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீரவாகு முருகையா மற்றும் குடும்பத்தினர் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவினை நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

இதன்போது, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜா வைத்தியர் வீரவாகு முருகையாவிற்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.

இந்நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீவானந்தராஜா, யாழ்.போதனா வைத்தியசாலை அரச தாதியர் சங்க தலைவரும் வைத்தியருமான எஸ்.நிமலன், குழந்தை வைத்திய நிபுணர் சரவணபவன், என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் எஸ்.உமாபதி, சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts