யாழ். பருத்தித்துறைப் பகுதியில் சுமார் 19 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் அதிரடி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.
சுப்பர்மடம் கடற்கரைப் பகுதியில் பாரியளவு கஞ்சா கடத்தல் இடம்பெறவுள்ளதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸார் உள்ளடங்கிய விசேட குழுவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டினை சோதனையிடுகையில் அங்கு அன்னளவாக 19 கிலோ எடையுள்ள கேரள கஞ்சா கைப்பற்றப் பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலும் வீட்டினுள் இருந்து ஒருவர் தப்பி ஓடியதாகவும். காங்கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.