இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களை செய்யும் முகமாக 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் இன்று பிற்பகல் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த 19வது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டமூல ஆவணம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு உள்ள அதிகாரங்களை குறைத்தல், அமைச்சரவை-பாராளுமன்றுக்கு கூடிய அதிகாரம் அளித்தல், சுயாதீன ஆணைக்குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் 19வது அரசியல் யாப்புத் திருத்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு கடந்த 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்திருந்தது.
அமைச்சரவை அனுமதியளித்ததன் பின்னர் 19ஆம் திகதி விசேட வர்த்தமானியும் வெளியானது குறிப்பிடத்தக்கது.