Ad Widget

18ஆம் திகதி முதல் மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம்!

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் நிவாரணம் வழங்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா தெரிவித்துள்ளார்.

இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மற்றும் டிசல் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக அரசாங்கம் 500 கோடி ரூபாவை செலவிடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வெளியிணைப்பு மோட்டார் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 35 கோடி ரூபா செலவிடப்படும். பைபர் கிளாஸ் படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்க 337 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான மண்ணெண்ணெய் நிவாரணத்திற்காக 115 கோடி ரூபா செலவு செய்யப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியில் வள அமைச்சர் விஜித்தமுனி சொய்ஸா மேலும் தெரிவித்தார்.

Related Posts