16 வயது சிறுவனை காணவில்லை

யாழ்ப்பாணம், குருநகர் ஐந்து மாடிப் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவனை கடந்த 24ஆம் திகதி முதல் காணவில்லை என சிறுவனது பெற்றோர் திங்கட்கிழமை (27) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.

கிருஷ்டியன் ஜீவன் (வயது 16) என்ற சிறுவனே இவ்வாறு காணாமற்போயுள்ளார். வீட்டிலிருந்து வெளியில் சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற சிறுவன் தொடர்ந்து வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் தேடியபோதும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனையடுத்து. சிறுவனை காணவில்லையென முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.