15 வயதுச் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு

missing personபுத்தூர் பகுதியில் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகன் காணாமல் போனமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளதாக அச்சுவேலி பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

புத்தூர் மேற்கைச் சேர்ந்த கவிதாசன் ரிஷாந்தன் என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் கடந்த 19ஆம் திகதி வெளியே செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுவனின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.