Ad Widget

யாழ்.வாக்காளர் எண்ணிக்கை 13 ஆயிரம் பேரால் அதிகரிப்பு

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை விடக் கடந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 12 ஆயிரத்து 948 பேர் புதிய வாக்காளர்களாகப் பதிவாகியுள்ளனர்.

இந்தப் புதிய வாக்காளர் பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. புதிய வாக்காளர் பெயர்ப் பட்டியலின் பிரகாரம் யாழ்.தேர்தல் மாவட்டத் தில் 4 இலட்சத்து 95 ஆயிரத்து 292 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் என்.சுதாகரன் தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகியிருந்தன.

இதற்கமைய புதிய வாக்காளர் பெயர்ப்பட்டியல் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் 21 ஆயிரத்து 521 பேரும், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில் 45 ஆயிரத்து 189 பேரும், காங்கேசன்முறை தேர்தல் தொகுதியில் 61 ஆயிரத்து 184 பேரும், மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 51 ஆயிரத்து 704 பேரும், கோப்பாய் தேர்தல் தொகுதியில் 53 ஆயிரத்து 615 பேரும்,

உடுப்பிட்டித் தேர்தல் தொகுதியில் 37 ஆயிரத்து 922 பேரும், பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் 35 ஆயிரத்து 51 பேரும், சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் 49 ஆயிரத்து 475 பேரும், நல்லூர் தேர்தல் தொகுதியில் 28 ஆயிரத்து 581 பேரும், கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் 68 ஆயிரத்து 589 பேரும் வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2010 ஆம் ஆண்டு முதன்முறையாகப் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பெயர்ப்பட்டியலில் 4 இலட்சத்து 84 ஆயிரத்து 791 பேராகக் காணப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு மேலும் குறைவடைந்து 4 இலட்சத்து 82 ஆயிரத்து 344 ஆகக் காணப்பட்டது. இதனால் 9 ஆக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது.

ஆயினும் வருடம் யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை முதன்முறையாக 12 ஆயிரத்து 948 பேரால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts