’13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்’ நூல் வெளியீடு

13th-theruththam-book 2ஜனநாயக இடதுசாரி முன்னனியின் இளவிவகாரங்களுக்கான செலாளர் கலாநிதி சிதம்பரம் மோகன் எழுதிய ’13 ஆவது அரசியல் யாப்பு சம்மந்தமான யதார்த்தமும் சில உண்மைகளும்’ நூல் வெளியீடு நேற்றய தினம் நடைபெற்றது.

நல்லூர் செட்டித் தெருவில் உள்ள லக்சறி விருந்தினர் விடுதியில் நடைபெற்ற இந்த இந்நிகழ்வில் சிறப்பு அதீதியாக யாழ்.இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் கலந்துகொண்டு நூலின் ஆசிரியர் மோகனிடம் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

இங்கு அவர் உரையாற்றும் பொழுது.

13ம் திருத்தம் தொடர்பில் சமீப காலத்தில் இரு முக்கிய சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒன்று இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இந்தியா சென்று திரும்பியிருக்கிறார்.

அதேபோன்று எமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இலங்கை வந்து திரும்பியிருக்கிறார். இவற்றையடுத்து இந்தியா என்ன கூறியது? என்ன கூறவில்லை? அதேபோன்று இலங்கை என்ன சொன்னது? என்ன சொல்லவில்லை? என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே அவை குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் இந்திய அரசாங்கம் கண்டிப்பாக 13ம் திருத்தம் தொடர்பில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில் ஒரு கதையினை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு தந்தை தான் இறக்கும் போது அவரிடமிருந்த 17 ஆட்டுக் குட்டிகளை 3 மகன்களுக்கு பிரித்துக் கொடுத்தாராம். அதாவது 17ல் பாதி மூத்த மகனுக்கும், 17ல் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும், 9ல் ஒரு பங்கு 3வது மகனுக்கும் கொடுக்க வேண்டும் கூறியிருந்தார்.

எனினும் அதனை பிரிக்க முடியாத நிலையில் சகோதரர்கள தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் அங்கு வந்த படித்த ஒரு ஆசான் எப்போதும் ஒற்றுமையாக இருக்கும் உங்களுக்குள் என்ன சண்டை எனக்கேட்டுள்ளார்.

அதன்போது விடயத்தை அவர்களும் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து அந்த ஆசான் தன்னிடமிருந்து ஒரு ஆட்டை கொண்டுவந்த 18ஆக மாற்றி விட்டு அதில் பாதி 9 ஆடுகளை மூத்த மகனுக்கு கொடுத்துவிட்டார். பின்னர் 18ல் 3பங்கு 6ஆடுகளை 2வது மகனுக்கு வழங்கிவிட்டார். அதன் பின்னர் 9ல் ஒரு பங்கு 2ஆடுகள் 3வது மகனுக்கும் கொடுத்து விட்டார்.

இப்போது மொத்தம் 17ஆடுகள். இதனையடுத்த அவர் தனது ஒரு ஆட்டைப் பிரித்துக் கொண்டு சென்றுவிட்டார். எனவே எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு இருக்கின்றது. அதேபோன்று தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் ஒரு தீர்வு நிச்சயமாக கிடைக்கும். அதில் தமிழர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.

13th-theruththam-book

Recommended For You

About the Author: Editor