13ம் திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்

சுயநிர்ணயக் கோரிக்கை தலைதூக்காது இருக்க வேண்டும் என்றால் 13ம் திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Sajith_Premadasa

நாம் இன்று பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உண்மையிலேயே அது மகிழ்ச்சியான விடயமொன்றாகும். ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் புலிகளின் யுத்தம் இருந்த காலத்தை விடவும் நெருக்கடியான நிலைமையொன்று இருக்கின்றது

யுத்தத்தில் வெற்றி பெற்ற எம்மால் சமாதானத்தை உருவாக்குவதில் வெற்றியடைய முடியவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இன, மாத, குல பேதமின்றி ஒன்றுபட்டவர்களாக அனைவரையும் இணைத்துச் செல்வதில் ஆட்சியாளகள் பின்னடைவு கண்டிருக்கின்றார்கள்.

இன்று கூட அதற்கான காலம் சென்று விடவில்லை. இந்த நாட்டின் ஆட்சியாளர்கள், எதிர்த்தரப்பினர், உட்பட அனைவரும் அரசியல் பேதங்களை மறந்து அதற்காக ஒன்றுபட்டுச் செயற்படவேண்டியிருகின்றது. அதன் மூலமே சமாதானமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

இன்று எமது நாட்டை சீரழிப்பதற்கு புலம்பெயர்ந்தவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதாக கூறிவருகின்றனர். அவ்வாறு கூறுவபவர்களுக்கு பொது அறிவொன்று இருக்க வேண்டும். அதாவது புலம்பெயர்ந்த தமிழர்கள், புலம்பெயர்ந்த விடுதலைப்புலிகள் என இருதரப்பினர்கள் காணப்படுகின்றார்கள். இதனை பிரித்தறிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு கிழக்கு மக்களின் விரும்பு வெறுப்புகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அது தான் ஜனநாயகம். இன்று சுயநிர்ணயம் என்ற விடயம் ஏன் தலைதூக்கின்றது.

ஐக்கிய இலங்கைக்குள் 13ஆவது திருத்தச்சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து விடயங்களும் தலையீடுதகள் இன்று முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் சுயநிர்ணயக் கோரிக்கை ஒருபோதும் தலைதூக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.