விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

accidentயாழ்.கந்தர்மடம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று காலை சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளதார்.

கடந்த புதன் கிழமை இரவு இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் கன்னாதிட்டி பகுதியைச் சேர்ந்த சிவராசா சிந்துஷன் (வயது 21) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor