120 குடும்பங்களுக்கு வீட்டுக் கடனுதவி

home-buldingதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தினால் 120 குடும்பங்களுக்கு வீட்டுக் கடன் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கும் 240 மில்லியன் ரூபா வீட்டுக் கடன் உதவியாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சுமார் 2 இலட்சம் ரூபா கடன் உதவியாக வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை, காணி உறுதி இல்லாத 38 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ். வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.