Ad Widget

11 உறவினர்கள் தடயங்களை அடையாளம் காட்டினர்

இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில் 11பேர் தங்களுடைய உறவினர்களின் பொருட்களை அடையாளம் காட்டியுள்ளனர் என்று பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸநாயக்க தெரிவித்தாக்ர்.

lion-air-

யாழ். சுப்பிரமணியம் சிறுவர் பூங்காவிற்கு முன்பாக மேற்படி 72 வகையான தடயப் பொருட்களும் கடந்த சனிக்கிழமை மற்றும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

இதன்போது, சனிக்கிழமையன்று 10பேரும் நேற்றைய தினத்தில் ஒரவரும் தங்களது உறவினர்களின் பொருட்களை அடையாளம் காட்டினர் என்று தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி, இந்த பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பலாலியில் இருந்து புறப்பட்டு இரத்மலானை நோக்கிச் சென்று கொண்டிருந்த லயன் எயார் நிறுவனத்தின் அன்ரனோவ் – 24 விமானம் விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி இரணைதீவுக் கடலினுள் வீழ்ந்தது.

தொடர்ந்து அதன் பாகங்களும் பயணிகளின் உடமைகளும், பெண்ணொருவரின் அடையாள அட்டை ஆகியன கடந்த 2013 மே மாதம் 3ஆம் திகதியிலிருந்து 5ஆம் திகதி வரையும் நடத்தப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டன.

மீட்கப்பட்டவற்றில் மக்களின் உடைமைகள் நேற்றும் நேற்று முன்தினமும் யாழ்ப்பாணத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், பாணந்துறை சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன தஸா நாயக்க தலைமையிலான குழுவினரால் விமானத்தில் பயணம் செய்தவர்களினை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் அவர்களின் உறவினர்களிடம் இடம்பெற்ற நிலையிலேயே 11பேரினால் அவை அடையாளம் காட்டப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

லயன் எயார் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட ஆடை, பொருட்கள் காட்சிக்கு

Related Posts