யாழ். மாவட்டத்தில் இனிமேல் யாராவது கைது செய்யப்படின் அதற்கு முன்னர் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாகவே தெரியப்படுத்தப்படும். அதன் பின்னரே அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார் யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா.
அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் பகலில் மட்டுமல்லாது இரவிலும் வீடுகளுக்குள் புகுந்து திடீரென மக்கள் கைது செய்யப்படுகின்றனர்.
அத்துடன் கைது செய்ய செல்பவர்கள் தம்மை யார் என்று அறிமுகப்படுத்துவதுமில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையை எவ்வாறு தெளிவுபடுத்தப்போகிறீர்கள் என ஊடகவியலாளர்களால் எழுப்பபட்ட கேள்விக்கு எரிக் பெரேரா பதில் அளித்தார்.
அவர் தனது பதிலில்
“பொலிஸார் யாரையாவது கைது செய்வதாக இருந்தால் தம்மை அடையாளப்படுத்தியே கைது செய்கின்றனர்.
பகலில் எல்லோரையும் பிடிக்க முடியாததனால் இரவில் கைது செய்கின்றனர். எதிர்காலத்தில் கைதுகள் இடம்பெற்றால் கைது செய்யப்படுபவர்களது குடும்பத்தினருக்குத் தெரிவித்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.