1000 குடும்பங்களுக்கு மின்சார விநியோகம்; வடமராட்சி கிழக்கில்

chunnakam-elect-ebவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்குப் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 5 கோடி ரூபா நிதியில் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கின் வசந்தம் திட்டத்தின் வடமாகாண திட்ட முகாமையாளர் ரி.குணசீலன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

வடமராட்சி கிழக்கில் 3 கிராமங்களை உள்ளடக்கி பரந்து பட்ட பிரதேசத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் குடும்பங்கள் பயனடைவதற்காக 5 கோடி ரூபா நிதியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

உடுத்துறை, ஆழியவளை, வத்திராயன் ஆகிய 3 கிராமங்களுக்குமே இந்த மின்சார இணைப்பு வழங்கப்பட்டது.

என்றார். வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மின் இணைப்புப் பணிகளுக்கு ஏற்ப முதற் கட்டமாக 90 வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஏனைய வீடுகளுக்கு படிப்படியாக மின் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் மின் இணைப்புக்கள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் மின்சாரக் கட்டணத்தை பாவனையாளர்கள் செலுத்தக் கூடியதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.