Ad Widget

100 நாள் இன்றுடன் முடிவு

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது.

தேர்தலில் மாற்றத்திற்கு ஒன்றுபடுவோம் மைத்திரி அரசின் கீழ் ஜனவரி 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய 100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. ஆயினும் குறித்த திட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட பல விடயங்கள் இன்னமும் செய்து முடிக்கப்படவில்லை.

அதன்ஒரு அங்கமாக 100 நாள் முடிவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. எனினும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பகிரங்கமாக நாடாளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் 19 ஆவது 20 ஆவது திருத்தச் சட்டங்கள் , தகவல் அறியும் உரிமைச்சட்டம் என்பன நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் மைத்திரி அரசினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

எனினும் குறித்த சட்டங்களும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிகள் 100 நாள் திட்டத்தில் அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் போனவர்கள் குறித்து தீர்வு, மீள்குடியேற்றம் என்பன நடைபெறவேண்டும் என பல தடவைகள் கோரிக்கையும் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts