வடமாகாண விவசாய திணைக்களப் பண்ணைகளில் வேலை செய்யும் 10 குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் நேற்றயதினம் வழங்கப்பட்டன.
வடமாகாண ஆளுநரின் நிதியிலிருந்து மேற்படி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.