10 இலட்சம் செலவில் நிமிர்ந்து நிற்கும் யாழ்.மணிக்கூட்டு கோபுரம்

clock-tower-2யாழ். மணிக்கூட்டு கோபுர திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ்.மாநகரப் பகுதியில் மீள் நிர்மானப்பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை திறக்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வுகள் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலமையில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாவட்ட பிரதம செயலாளர் ஏ. விஜயலட்சுமி, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை கடந்த 5 வருடங்களாக தனியார் நிறுவனம் ஒன்றினால் டிஜிட்டல் கடிகாரம் பொருத்தப்பட்டு அடிக்கடி பழுதடைந்த நிலையில் தொடர்ந்தும் காணப்பட்டு வந்தது.

இதனையடுத்து மாநகர சபையினால் கம்பிக் கடிகாரம் பொருத்தப்பட்டு 10 இலட்சம் ரூபா செலவில் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணிக்கூட்டு கோபுரம் புனரமைப்பு

Recommended For You

About the Author: Editor