Ad Widget

ஹக்கீமின் தேசிய அரசுக்கான அழைப்பை ஏற்க ஆலோசித்துவருகிறதாம் கூட்டமைப்பு!

கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசை நிறுவுவதற்கான ஹக்கீமின் அழைப்பை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், இதுகுறித்த முடிவை நாளை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிவிப்பார் என்றும் தெரியவந்துள்ளது.

sampanthan

மத்தியைப்போன்று, மாகாணத்திலும் தேசிய அரசை உருவாக்க தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி என்பன முன்வரவேண்டும் என்று மு.கா. தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பையடுத்து நேற்று மாலை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கிழக்கு மாகாண உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திரக்கட்சி என்பன இணைந்து அமைத்துள்ள ஆட்சிக்கு கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவளிப்பதே சிறந்தது என்று சம்பந்தன் கருத்துத் தெரிவித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

நேற்று மாலை இதுகுறித்து மு.கா.வுடன் கலந்துரையாடிவிட்டு இன்று முற்பகல் சம்பந்தன் தனது முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Related Posts