Ad Widget

ஸிகா வைரஸ் : இந்த அறிகுறிகள் இருந்தால் வைத்தியரை நாடுங்கள்

ஸிகா வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்ற போதிலும் இது குறித்து அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு அறிவித்துள்ளது.

ஈட்ஸ் என்ற ஒரு வகை நுளம்புகளினாலேயே இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் தொடர்ச்சியாக காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாட வேண்டும் எனவும் அந்த பிரிவு அறிவித்துள்ளது.

சிகா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் .

ஸிகா’ வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இருந்தபோதிலும் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவது சிறந்தது. ஈட்ஸ் வகை நுளம்புகளால் இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் காணப்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாட வேண்டும். என மக்களிடம் கோருகின்றோம்.

குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை. இருந்த போதிலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட தொற்று நோய் பிரிவானது மிகவும் அவதானத்துடன் செயற்படுவதோடு தகவல்களை சேகரித்து வருகின்றது.

ஸிகா என இணங்காணப்படும் இந்த வகை வைரஸ் தொற்றானது தற்போது லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதுவரை இலங்கையில் எவரும் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்படவில்லை.

Related Posts