வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு பேரணி

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலையற்ற பட்டதாரிகளுடன் இணைந்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட பேரணி, யாழ். மாவட்ட செயலகம் வரை சென்றுள்ளது.

இதன்போது, ‘மத்திய அரசே! மாகாண அரசே! நியமனத்தை விரைவுபடுத்து’, ‘கை கூப்பாது ஆட்சி பிடிக்க முடியாது, கால் பிடிக்காது நியமனம் பெற முடியாது’, ‘பொறுப்பான அதிகாரிகளே, எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள்…’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள், யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பித்துள்ள காலவரையற்ற போராட்டம் இன்று 38ஆவது நாளாகவும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts