Ad Widget

வேகமாக வாகனம் செலுத்துபவர்கள் இனி சிக்குவர்! வேகத்தைக் கணிக்கும் ‘ராடர்’கள் யாழ். பொலிஸாரிடம்!!

வாகனங்களின் வேகத்தைக் கணிக்கும் ‘ராடர்’ கருவி பொலிஸ் திணைக்களத்தால் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் யாழப்பாணத்தில் வேகமாக வாகனங்களை செலுத்துவதால் இடம்பெறும் விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ராடர் கருவி இலங்கையில் பல வருடங்களுக்கு முன்னரே அறிமுகமான போதிலும் யாழ். மாவட்டத்தில் நேற்றுப் புதன்கிழமையே இது அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல விபத்துக்களுக்கு சாரதிகளின் கட்டுப்பாடற்ற வேகமும் காரணமாக இருந்தது.

வேகத்தைக் கணிக்கும் ராடர் இல்லாததால் நகரப் பகுதியிலும் மற்றும் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை செலுத்த அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக போக்குவரத்துப் பொலிஸாரால் நடவடிக்கைகள் எதனையும் எடுக்க முடியாத நிலை காணப்பட்டது.

இந்நிலையில் நேற்றுப் புதன்கிழமை தொடக்கம் வேகத்தைக் கணிக்கும் ராடர்களுடன் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தமது கடமையைத் தொடர்ந்தனர்.

Related Posts