Ad Widget

வெள்ளைக்கொடியுடன் தமிழக மீனவர்கள் வந்தாலும் நாம் கைது செய்வோம்

army-ruwan-vanikasooreyaஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி எவரும் வருவார்களாயின் அவர்களை கைதி செய்ய எமக்கு அனுமதியுள்ளது. வெள்ளைக்கொடிகளுடன் தமிழக மீனவர்கள் வந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவிக்கும் இராணுவ பேச்சாளர் ருவான் வணிக சூரிய இந்திய மீனவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

அடுத்த மாதம் 2 ஆம் திகதி இந்திய மீனவர்கள் வெள்ளைக்கொடிகளுடன் இலங்கையில் தஞ்சம் அடையும் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில் அது தொடர்பில் வினவிய போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;

சர்வதேச கடல் எல்லைக்குள் மீனவர்கள் மீன் பிடியில் ஈடுப்படுவதற்கு நியதிகள் உள்ளது. இந்திய மீனவர்களாக இருந்தாலும் இலங்கை மீனவர்களாக தமது நாட்டு கடல் எல்லையினை விட்டு வெளியில் செல்வார்களாயின் அத்து மீறிய செயற்பாட்டிற்காக அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்படுவார்கள். இன்று இலங்கை மீனவர்கள் 41 பேர் 23 படகுகளுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்காக நான் வெள்ளைக்கொடியுடனும் பதாதைகளுடனும் செல்வதை அந்நாட்டு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோலவே இலங்கையின் சட்டத்திட்டங்களும் உள்ளன.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கமே தீர்மானம் எடுக்க வேண்டும். அதேபோல் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் இலங்கை கடல் எல்லைக்குள் வருவார்களாயின் அவர்களை கைது செய்வோம். அவர்கள் வெள்ளைக்கொடிகளுடன் வந்தாலோ அல்லது வேறு எவ்வாறு வந்தாலும் அத்துமீறி எமது கடல் எல்லைக்குள் வந்தால் கைது செய்யப்படுவார்கள்.

இந்திய மீனவர்களுக்கென தனி சலுகைகள் இல்லை இலங்கை மீனவர்களுக்கும் அதே அறிவுறுத்தலே குறிப்பிடப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கனக்கான படகுகளுடன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் நுழைவார்களேயாயின் அது இலங்கை மீனவர்களையே பாதிக்கிறது. ஆனாலும் இவ்வாறு கைது செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் இவர் தெரிவித்தார்.

Related Posts