Ad Widget

‘வெளியேறியவர்களின் கோப்புகள் உள்ளன, பழிவாங்கப் போவதில்லை’: மகிந்த

இலங்கையில் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய நபர்களின் தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தன் வசம் இருப்பதாக கூறிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அவற்றைப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கைகைகளில் ஈடுபட தான் தயாரில்லை கூறியுள்ளார்.

vaddu-hindu-students-mahintha

மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தரப்பினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் கூட்டமொன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, தனது அரசாங்கத்தை விட்டு வெளியேறவோ இணையவோ எந்தவொரு நபருக்கும் சுதந்திரம் உள்ளதாகவும் தான் அதனை தடுக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறியுள்ள போதிலும், அதனால் கட்சிக்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் இங்கு கூறியுள்ளார்.

இதனிடையே, தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 48 மணி நேரத்தில் அரசாங்கம் பெரும் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார்.

கோட்டை நாக விகாரையில் மாதுளுவாவே சோபித்த தேரரை சந்தித்த பின்னரே அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.

பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்காக ஆரம்பம் முதலே உழைத்த சோபித்த தேரருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த சந்திப்பை நடத்தியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொது வேட்பாளராக தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு மக்களின் பலத்த ஆதரவு கிடைத்துவருவதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமய கட்சி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை நிறைவேற்றுவதன் முலம் தற்போது தள்ளப்பட்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து மீளுவதற்கு அரசாங்கத்திற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.

Related Posts