Ad Widget

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு வரையறை

வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்று வெளிநாடு செல்லும் பெண்கள், தங்களது குடும்ப பின்னணி தொடர்பான அறிக்கையொன்றை வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்துக்கு வழங்கப்பட வேண்டும் எனும் நடைமுறை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பணிப்பெண்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுச் செல்லும் பெண்களுக்கே இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் உள்ள பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறை கொண்டுவரப்படவுள்ளது என பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts