Ad Widget

வீதீகளில் அமைப்பதில் புதிய அரசு மோசடி! – நாமல்

திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை விடவும் சிறிய அளவிலான விதிகளையே புதிய அரசாங்கம் அமைத்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாதை நிர்மாணப் பணிகளுக் காக பயன்படுத்தப்படுகின்ற கொங்கிரீற் கற்படிகளின் தடிப்புகளை குறைத்தும் செலவை குறைத்தும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன், கடந்த அரசாங்கம் வீதி அபிவிருத்தி பணிகளின் போது ஊழல் மோசடிகளில் ஈடுபட்டது என நாட்டிற்கு வெளிப்படுத்தியுள்ளதை நிரூபிப்பதற்காகவே தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்தி திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள வீதிகளில் பாதுகாப்பு வலயங்களை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.

அத்துடன் வீதிகள் ஸ்திரமற்ற தன்மையில் காணப்படுகின்றது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Posts