Ad Widget

வீதி விபத்தை தடுப்போம் : மாணவர்களிற்கு பொலிஸார் விழிப்புணர்வு

யாழ். மாவட்டத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களிற்கு வீதி விபத்துகள் ஏற்படும் சந்தர்ப்பங்களையும், அவற்றை தவிர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் விழிப்பூட்டல் கருத்தரங்கும் வீதி நாடகமும் இடம்பெற்றது.

traficc-police

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் வழிகாட்டலில் யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் யாழ் வேம்படி மகளீர் கல்லூரி இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பமான இவ் வழிகாட்டல் கருத்தரங்கில் ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கருத்தரங்கின் போது வீதி விபத்துகள் ஏற்ப்பதுவதற்கான காரணங்களும், அவற்றை தவிர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் மாணவர்களிற்கு புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் தெளிவு படுத்தப்பட்டதுடன் முடிவில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்க்கப்பட்டு சரியான பதில் சொன்ன மாணவர்களிற்கு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக விபத்துகள் தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த பொலிஸ் குழுவினரால் வீதி நாடகம் ஒன்றும் நடித்து காட்டப்பட்டது.

Related Posts